வாழைக்காய் பிரட்டல் - அட அட அட.. என்ன ருசி?

வழக்கமாக வாழைக்காயைப் பொரியல் செய்திருக்கேன். வேற விதமாக சமைக்கலாமேன்னு.. வாழைக்காயை அவிச்சிப் பிரட்ட முடிவு செய்தேன். நல்லா இருந்ததுங்க.. முயற்சி செய்து பாருங்க. :)



தேவையான பொருட்கள் :

வாழைக்காய் - 2
தாளிப்பு - 1 தே. கரண்டி
சின்ன வெங்காயம் - 5
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - சிறிய துண்டு
கறிவேப்பிலை - கொஞ்சம்
மஞ்சத் தூள் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1 தே. கரண்டி
உப்பு & எண்ணெய் - தே. அளவு

செய்முறை :

1. வாழைக்காய்களை தோல் சீவி, சிறு துண்டுகளாக வெட்டி பானையில் தண்ணீரில் இடவும். கொஞ்சம் மஞ்சத்தூளையும் சேர்த்து வேக விடவும்.
2. வாணலையில் எண்ணெய் ஊற்றி, கடுகு தாளிப்பை சேர்த்து, அதனுடன் வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை சேர்த்து கிளறவும்.
3. மிளகாத்தூளை தண்ணீரில் கலந்து ஊற்றி அதில் வேக வைத்த வாழைக்காய்களை கொட்டவும்.
5. உப்பை சேர்த்து, கெட்டியாகும் வரை கிளரவும்.
டடா.. வாழைக்காய் பிரட்டல் ஆச்சி!!

p.s இறுதியில் கொஞ்சம் தேங்காய்ப்பூவையும் சேர்த்துக் கிளறி எடுங்கள். இன்னும் ருசியாக இருக்கும்.

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response.
3 Responses
  1. gravatar Anonymous

    My mother do exactly the same way Vimala. She used to tell this way of cooking banana reduce its gas content.

    It will be good if u add some grated coconut at end.

    -Naga

  2. heii.. that's a good idea too.. sound nice.. will try next time naga

  3. enga kuda oru bottle sprite or 7up illai oru panner soda kodunga. illana vayuu thentharu thoonka vidathu