மிளகு இறைச்சி பிரட்டல் - அட அட அட.. என்ன ருசி?


காரமான இறைச்சி பிரட்டல்.. அட்டகாசமாக இருக்கும்.
சமைச்சிப் பாருங்க. தேவையான பொருட்கள் :

எலும்பில்லாத இறைச்சி - கால் கிலோ
பெரிய வெங்காயம் - 2
தக்காளி - 2
முந்திரி பருப்பு - 10
இஞ்சி - கொஞ்சம்
பூண்டு - 10
மிளகு - 2 தே. கரண்டி
சோம்பு - 1 தே. கரண்டி
மிளகாய்த்தூள் - 1 தே.கரண்டி
கறிவேப்பிலை - கொஞ்சம்
உப்பு & எண்ணெய் - தே. அளவு
நெய் - 1 தே. கரண்டி


செய்முறை :
1. இறைச்சியை சுத்தம் செய்துக் கொள்ளவும்.
2. வாணலியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி, சோம்பு, இஞ்சி, பூண்டு, முந்திரி, வெட்டிய தக்காளி, மிளகாய்த்தூள் சேர்த்து, வதக்கவும். அவற்றை அரைத்தும் கொள்ளவும்.
3. அரைத்தவற்றுடன் உப்பை சேர்த்து இறைச்சியில் பிசறவும். அதனை வேக வைக்கவும்.
4. மீதமிருக்கும் எண்ணெயில் நெய் சேர்த்து வெங்காயம், சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
5. அதனுடன் வேக வைத்த இறைச்சியைக் கொட்டிக் கிளவும்.
6. வறுத்து இடித்த மிளகுத்தூளைக் கொட்டி இறைச்சியைப் பிரட்டி எடுக்கவும்.

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response.
0 Responses