ஜீரக சோறு - அட அட அட.. என்ன ருசி?

வார இறுதியில் வித்தியாசமாக என்ன சமைக்கலாம்ன்னு யோசிச்சப்போது கையில் கிடைத்தவைகளைக் கொண்டு சமைத்த சமையல்.. கொஞ்சம் வித்தியாசமாகவும் இருந்தது.. நேரம் கிடைத்தால், செய்து பாருங்க. :P




தேவையான பொருட்கள் :

பாசுமதி அரிசி - 1 குவளை
சீரகம் - 2 தே. கரண்டி
முந்திரி பருப்பு - 2 தே.கரண்டி
மிளகு - 6
Bay leaf - 2
பட்டை - 2
கிராம்பு - 3
வெட்டிய வெங்காயம் - 1
நெய் & உப்பு - தே. அளவு


செய்முறை :

1. அரிசியைக் கழுவி 1/2 மணி நேரத்திற்கு ஊற வைக்கவும்.
2. முந்திரி பருப்பை நெய்யில் வறுத்தெடுக்கவும்.
3. பிறகு, மீதமிருக்கும் நெய்யில் சீரகம்,மிளகு,Bay leaf, பட்டை, கிராம்பு, வெட்டிய வெங்காயம் போன்றவற்றையும் வதக்கவும்.
4. குக்கரில் அரிசியைக் கொட்டி அதில் வதக்கிய அனைத்தையும் கொட்டி, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து அரிசியை வேக விடவும்.
இதை காரமான கறி அல்லது ரைட்டாவோடு சாப்பிட்டுப் பாருங்க :))

You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response.
1 Response
  1. Don't know anything about cooking, but need to try...I mean try to eat (-: