வார நாட்களில் காலை 11.45க்கு அட அட அட என்ன ருசி சமையல் குறிப்புகளை வழங்கிக்கிட்டு இருக்கேன். நம் நேயர்களும் நல்ல குறிப்புகளை கொடுத்துக்கிட்டு இருக்காங்க. உங்க கிட்டயும் நல்ல குறிப்பு இருந்தா தாராளமாக கொடுங்க.
Hougang நேயர் மாலதி கொடுத்து உதவிய சமையல் குறிப்பு இது. நான் செய்து பார்த்து அசந்துப் போனேன்!! அவ்வளவு ருசி!! மாலதிக்கு நன்றி. :))
தேவையான பொருட்கள் :
நெத்திலி கருவாடு - 1 1/2 பிடி
காய்ந்த மிளகாய் - 8 அல்லது 10
சின்ன வெங்காயம் - 6
கருவேப்பிலை - 6
புளி - கொஞ்சம்
உப்பு, எண்ணெய் - தே.அளவு
செய்முறை :
1. சின்ன வெங்காயம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை இவற்றை முதலில் வதக்கிக் கொள்ளவும்.
2. நெத்திலிகளை மொறு மொறுவென பொரித்துக் கொள்ளுங்கள்.
3. Blender லில் வதக்கிய வெங்காயம், காய்ந்த மிளகாய், கருவேப்பிலை போன்றவற்றை கொற கொறவென அரைத்துக் கொள்ளவும்.
4. பின்னர் தனியே பொரித்த நெத்திலி கருவாட்டையும் கொற கொறவென அரைத்துக் கொள்ளவும்.
5. சட்டியில் கொஞ்சம் எண்ணெய் ஊற்றி அரைத்த கலவையைப் போட்டு, கிளரவும். அதனுடன் கொஞ்சம் புளி தண்ணீரையும், உப்பையும் சேர்க்கவும்.
6. இறக்கி வைக்குமும் எலுமிச்சை, calamansi சாற்றைச் சேர்க்கவும். சுவை கூடுதலாக இருக்கும்.


அடடே நான் சைவம் எனக்கு எதுவும் கிடையாதா.