புதினா ரசம் - அட அட அட.. என்ன ருசி?
தேவையான பொருட்கள் :
புதினா – சிறு கட்டு
தக்காளி – 2
துவரம் பருப்பு – 4 மே.கரண்டி
மிளகு – ½ தே. கரண்டி
கடுகு - ½ தே. கரண்டி
சீரகம் - ½ தே. கரண்டி
புளி – கொஞ்சம்
பெருங்காயம் - கொஞ்சம்
கொத்தமல்லி – 2 தே.கரண்டி
உப்பு, எண்ணெய் – தே. அளவு
செய்முறை :
1. துவரம் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். அதனுடன் தக்காளியை மசித்துக் கொள்ளவும்.
2. புளியைக் கரைத்துக் கொள்ளவும்.
3. கொத்தமல்லி, மிளகு, ½ தே.கரண்டி சீரகம், இவற்ரை வறுத்து அரைக்கவும்.
4. புதினா இலைகளை சுத்தம் செய்து தயார் செய்துக் கொள்ளவும்.
5. சட்டியில் எண்ணெய் ஊற்றி கடுகு, மீதி சீரகம், பெருங்காயம் போட்டு தாளித்து, பருப்பு-தக்காளி கலவையைக் கலந்துக் கொள்ளவும்.
6. அதனுடன் அரைத்து வைத்திருக்கும் பொடியையும், புளி தண்ணீரையும் சேர்த்து, புதினா இலைகள், உப்பு சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.
You can follow any responses to this entry through the RSS 2.0 feed. You can leave a response.
0 Responses

